சீடன் (2011 திரைப்படம்)
சீடன் | |
---|---|
இயக்கம் | சுப்பிரமணியம் சிவா |
தயாரிப்பு | அமித் மோகன் |
கதை | ரஞ்சித் |
இசை | தீனா |
நடிப்பு | தனுஷ் உன்னி முகுந்தன் அனன்யா சுஹாசினி விவேக் ஷீலா |
ஒளிப்பதிவு | ஸ்ரீனிவாஸ் தேவாம்சம் |
படத்தொகுப்பு | ராம் சுதர்ஷன் |
விநியோகம் | கலாசங்கம் பிலிம்ஸ் |
வெளியீடு | 25 பிப்ரவரி 2011 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சீடன் (Seedan) திரைப்படம் 2011-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை சுப்பிரமணியம் சிவா எழுத, அமித் மோகன் தயாரித்தார். இத்திரைப்படத்தில் உன்னி முகுந்தன், அனன்யா, சுஹாசினி, விவேக், ஷீலா மற்றும் பலர் நடித்துள்ளனர்[1]. 2002-ல் வெளிவந்த 'நந்தனம்' என்ற மலையாள படத்திலிருந்து மறு ஆக்கம் செய்யப்பட்ட படமாகும்[2][3]. தனுஷ் இப்படத்தில் கௌரவ வேடத்தில் நடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர்கள்
- தனுஷ் - சரவணன், கடவுள் முருகன்
- உன்னி முகுந்தன் - மனோ தினேஷ்
- அனன்யா - மஹாலக்ஷ்மி
- சுஹாசினி - தங்கம்
- விவேக் - கும்பிடிசாமி
- ஷீலா - அமிர்தவல்லி
- இளவரசு - மாதவ கவுண்டர்
- மீரா கிருஷ்ணன் - ஜானகி
- செல் முருகன் - கும்பிடிசாமி உதவியாள்.
கதைச்சுருக்கம்
அமிர்தவல்லி (ஷீலா) என்ற வயதான பெண்மணிக்கு பணியாளாக வேலை செய்கிறாள் மகாலட்சுமி (அனன்யா). அந்த வீட்டில் இருக்கும் அனைவரும் அவைளை ஒரு வேலையாளாக கருதாமல், குடும்பத்தில் ஒருத்தராகவே கருதுகிறார்கள். இருந்தாலும், அவளே அனைத்து வேலைகளையும் செய்வதாகவே அமைகிறது. அவள் ஒரு முருக பக்தை. பழனியில் வசித்தாலும், அவளால் கோவிலுக்கு போக முடியவில்லை. அறிமுகம் இல்லாத ஒரு நபருடன் தனக்கு திருமணம் நடப்பதாக கனவு காணுகிறாள் மஹா. மறுநாள், கனவில் வந்த அதே நபர் அந்த வீட்டிற்கு வருகிறார். மஹா கனவில் கண்ட ஆண் மகன் அமிர்தவல்லியின் பேரன் மனோ (உன்னி முகுந்தன்) தான். துவக்கத்தில் சில தயக்கம் இருந்தாலும், இருவரும் ஒருவரையொருவர் காதல் செய்கிறார்கள்.
மனோ தன் அன்னை தங்கதிற்கு (சுஹாசினி) அவர் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்வதாக வாக்கு அளித்திருந்தான். ஆனாலும் மனோ மஹா காதலை பற்றி தன் அம்மாவிடம் சொல்ல தைரியம் வரவில்லை. இந்நிலையில், தங்கம் தன் மகன் மனோவிற்கு வேறு பெண் பார்க்கிறார். பின்னர் மனோ மஹா காதல் விவகாரம் தெரியவர, தங்கத்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல், இருவரையும் ஒருவரையொருவர் மறந்துவிட சொல்கிறார். இந்த சம்பவங்களால், தங்கம், அமிர்தவல்லி, மனோ தவிர வீட்டில் உள்ள மற்ற அனைவரும் மஹாவை கீழ் தரமாக நடத்துகிறார்கள். அதனால் கோவம் கொண்ட மஹா, இனியும் தன் கடவுள் முருகன் மோகத்தில் முழிப்பதில்லை என்றுமுடிவு செய்தாள்.
மாதவ கவுண்டர் (இளவரசு) சரவணனை (தனுஷ்) வீடு சமையல்காரராக வேலைக்கு வைக்கிறார். சரவணனின் சமையல் அனைவருக்கும் பிடித்திருந்தாலும், மஹாவிற்கு மட்டும் சுத்தமாக பிடிக்கவில்லை. அதே வீட்டில், கும்பிடிசாமியுடன் (விவேக்) சரவணன் தங்குகிறான்.கும்பிடிசாமி ஒரு போலி சாமியார் என்று கண்டறிந்த சரவணன், கும்பிடிசாமியை மிரட்டுகிறான். கும்பிடிசாமியின் உதவியுடன், மனோவிற்கும் மஹாவிற்கும் பொருத்தம் இல்லை என்று சொல்லவைக்கிறான் சரவணன். பின்னர் பல வேலைகள் செய்து, மஹாவையும் மனோவையும் சேர்த்து வைக்கிறான் சரவணன். தங்கமும், அமிர்தவல்லியும் திருமணத்த்திற்கு ஒப்புக்கொள்ள, திருமணநாளன்று சரவணனுக்கு நன்றி சொல்ல தேடுகிறார்கள். சரவணன் யார்? சரவணனுக்கு நன்றி சொன்னார்களா? மஹா மீண்டும் கடவுள் முருகன் முகத்தில் விழித்தாளா? போன்ற கேள்விகளுக்கு விடைகாணுதலே மீதி கதையாகும்.
இசை
இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் தீனா ஆவார்.
வரிசை
எண் |
பாடல் | பாடியவர் |
---|---|---|
1 | எனது | வி.வி.பிரசன்னா, ஜானகி ஐயர் |
2 | முன்பனி | சிரேயா கோசல் |
3 | ஒரு நாள் மட்டும் | சித்ரா |
4 | சரவண சமையல் | தனுஷ், ஹரிஹரன் |
5 | வல்லியம்மா | ஷங்கர் மஹாதேவன், சின்னப்பொண்ணு |
6 | யாதுமாகியே | ஷங்கர் மஹாதேவன், கவிதா கிருஷ்ணமூர்த்தி |
விமர்சனம்
நவ்சன்னிங்.காம் ரோஹித் ராமச்சந்திரன் இப்படத்திற்கு 1/5 என்ற மதிப்பெண்ணை வழங்கினார்.[4]
மேற்கோள்கள்
- ↑ "www.behindwoods.com". http://www.behindwoods.com/tamil-movie-news-1/jan-10-02/dhanush-seedan-ananya-13-01-10.html.
- ↑ "www.rediff.com". http://www.rediff.com/movies/report/south-review-seedan/20110225.htm.
- ↑ "www.sify.com" இம் மூலத்தில் இருந்து 2013-10-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131028195215/http://www.sify.com/movies/seedan-review-tamil-14963794.html.
- ↑ "nowrunning.com" இம் மூலத்தில் இருந்து 2014-07-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714093153/http://www.nowrunning.com/movie/7331/tamil/seedan/2989/review.htm.