சிதம்பரம் இளமையாக்கினார் திருக்கோயில்
இளமையாக்கினார் திருக்கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 11°23′54″N 79°41′11″E / 11.3983727°N 79.6864182°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | தில்லை, பெரும்பற்றப் புலியூர், தில்லைவனம், திருப்புலீஸ்வரம் |
பெயர்: | இளமையாக்கினார் திருக்கோயில் |
ஆங்கிலம்: | Thillai Ilamaiyaakinaar Temple |
அமைவிடம் | |
ஊர்: | சிதம்பரம் |
மாவட்டம்: | கடலூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | திருப்புலீஸ்வரர் |
தாயார்: | திரிபுரசுந்தரி |
தல விருட்சம்: | தில்லைமரம் |
தீர்த்தம்: | இளமை தீர்த்தம் |
ஆகமம்: | காமீகம் |
வரலாறு | |
தொன்மை: | 1000-2000 வருடங்களுக்கு முன் |
இளமையாக்கினார் திருக்கோயில், தமிழ்நாடு, கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலுள்ள சிவன் கோயில்[1]. இக்கோயில் நடராஜர் கோயிலுக்கு மேற்கு திசையில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு எதிர்ப்புறத்தில் இளமை தீர்த்தம் உள்ளது.
தல வரலாறு
வியாக்ரட்பாதர் தில்லைக்கூத்தனின் ஆனந்த நடனத்தைக் காண விரும்பி சிதம்பரம் வந்து, தீர்த்தக்கரையில் ஒரு சிவலிங்கத்தைச் செய்து, குடில் அமைத்து தவமிருந்தார். இறைவன் அருளால் இவர் புலிக்கால் பெற்றதால், இத்தல இறைவன் "திருப்புலீஸ்வரர்' என்றும், இத்தலம் "திருப்புலீஸ்வரம்' என்றும் பெயர் பெற்றது.
சிவனடியார் ஒருவர் அனைத்து சிவன் கோயில்களுக்கும் சென்று, விளக்கேற்றும் வழக்கமுடையவர். இறைவனின் சோதனையால் வறுமையில் வாடியபோதும், தன் சொத்துக்களை விற்றுத் தன் பணியைத் தொடர்ந்தார். வறுமை மிகுந்து திரி வாங்கவும் வழியில்லாமல் கணம்புல்லை திரியாக்கி தீபமேற்றி இறைவனை வழிபட்டார். எனவே இவர் கணம்புல்லர் என்று அழைக்கப்பட்டதோடு, 63 நாயன்மார்களில் ஒருவரானார்.
திருநீலகண்டருக்கு சிவன் அருள்செய்த தலமிது. நீலகண்டருக்கும் அவர் மனைவிக்கும் இளமையை மீண்டுமளித்ததால் இறவன் இத்தலத்தில் இளமையாக்கினார் எனப் பெயர்பெற்றார்.
வழிபட்டோர்
திருநீலகண்டர், ரத்னாசலை, கணம்புல்ல நாயனார், வியாக்ரபாதர் ஆகியோர் வழிபட்ட தலம்.
திருவிழாக்கள்
தை மாதம் விசாகம் நட்சத்திரத்தில் திருநீலகண்டருக்கு திருவோடளிக்கும் விழா சிறப்பாக நடைபெறும். இதில் பல சிவனடியார்கள் பங்கேற்று திருவோடு பெறுவர். தைப்பூசத்தன்று வியாக்கிரபாதருக்கும், விசாகம் நட்சத்திர நாட்களில் திருநீலகண்டருக்கும், கிருத்திகையன்று கணம்புல்லருக்கும் பூஜைகள் நடக்கும். தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு பூஜை நடக்கும்.