கோவளம் கைலாசநாதர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கோவளம் கைலாசநாதர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கோவளம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக கைலாசநாதர் உள்ளார். சிவராத்திரி, கார்த்திகை, பிரதோஷம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. பௌர்ணமி நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிசேகங்கள் நடைபெறும்.[1]

அமைப்பு

திருச்சுற்றில் குபேர கணபதி வடக்கு நோக்கிய நிலையில் காணப்படுகிறார். விஜய கணபதி மற்றொரு சன்னதியில் உள்ளார். மூலவர் கோஷ்டத்தில் சிவ கணபதி உள்ளார். பூமாதேவியுடன் வெங்கடேசர், சூரியன், மகாலிங்கம், மகாகாளி, நாகாத்தம்மன், சுவர்ண பைரவர் ஆகியோர் உள்ளனர். தூண்களில் ராமாயணச் சிற்பங்கள் காணப்படுகின்றன. ஆவுடையாரில் கோயில் குறித்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. [1]

வரலாறு

இப்பகுதியில் வாழ்ந்த கடல் வணிகள் பாதுகாப்பிற்காகவும், தொழில் சிறப்பாக அமையவும் சிவனுக்குக் கட்டிய கோயில் கடல் சீற்றத்தால் மறைந்துவிட்டது. பின்னர் வந்த பல்லவ மன்னர் சிவனுக்குக் கோயில் கட்டும் முயற்சியில் ஈடுபட்டு சிவன் அருளால் கோயில் கட்டினார். [1]

மேற்கோள்கள்