குன்னிமரக் கருப்பண்ணசாமி கோவில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

குன்னிமரக் கருப்பண்ணசாமி கோவில் நாமக்கல் - திருச்சி சாலையில் 12 கி.மீ தொலைவில் நாமக்கல் மாவட்ட எல்லையருகில் அமைந்துள்ள வலையப்பட்டி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இது படர்ந்த வெளியில் அமைந்துள்ள ஒரு சமுதாயக் கோவில் ஆகும்.

தலவரலாறு

படிமம்:குன்னிமரத்தான் ஆலய தோற்றம்.JPG
குன்னிமரத்தான் ஆலய தோற்றம்

குறைந்த பட்சம் 500 முதல் 600 வருடங்கள் பழைமையானது. கோவில் மூலவர் கருப்பண்ணசாமி ஒரு காலத்தில் குன்னிமரத்தடியில் சுயம்புவாக தோன்றியதாக நம்பப்படுகிறது. சுமார் 150 அல்லது 200 வருடங்களுக்கு முன்பு வலையப்பட்டி பகுதியில் வாழ்ந்த உழவர்கள் தங்கள் நிலத்தில் விளைந்த நெற்கதிர்களை அடித்துப் பிரிப்பதற்காக அங்கிருந்த பயனற்ற நிலம் ஒன்றை விவசாய வேலைகள் செய்வதற்கு சுத்தப்படுத்தினார்கள். சுற்றி நட்டிருந்த மரங்களை வெட்ட முயன்ற போது குன்னி மரம் ஒன்றிலிருந்து இரத்தம் பீரிட்டு வருவது கண்டு அதிர்ந்தார்கள். அவர்கள் முன்பு கருப்பண்ணசாமி தெய்வம் தோன்றி தனக்கு கோவில் கட்டி வழிபட்டால் அவர்கள் வளம்பெற்று திகழ வேண்டியது வழங்குவேன் எனக்கூறி மறைந்தார்.

அவ்வூர் பொதுமக்கள் ஒன்று கூடி கருப்பண்ணசாமிக்கு கோவில் எழுப்பினார்கள். குன்னிமரத்தினடியிலிருந்து தோன்றிய சுயம்பு மூர்த்தி என்பதால் குன்னிமரக் கருப்பண்ணசாமி என்று மூலவருக்கு பெயர் வழங்கலாயிற்று. தற்போது இக்கோவிலில் மூலவருக்கு தினசரி மூன்று கால பூசை நடைபெறுகிறது.

நேர்த்திக்கடன்கள்

படிமம்:நேர்த்திக் கடனுக்காக தொங்கவிடப்பட்டுள்ள கோழிகள்.JPG
நேர்த்திக் கடனுக்காக தொங்கவிடப்பட்டுள்ள கோழிகள்

இக்கோவிலில் நேர்த்திக்கடன்கள் செலுத்துவது மற்ற கோவில்களைவிட வேறுபட்டது. கோழிகளை உயிருடன் தலைகீழாக கட்டித் தொங்கவிடுவது அதிலொன்றாகும்.[சான்று தேவை]

வெண்கல மணிகள் கட்டுவது, வேல் சூலங்களை நடுவது என பல நேர்த்திக்கடன்கள் உண்டு.

கருப்பண்ணசாமி குடிபழக்கத்திற்கு அடிமையானவர்களை இக்கொடிய பழக்கத்திலிருந்து விடுவிப்பதாக நம்பப்படுகிறது. கையில் கருப்பண்ணசாமி கயிற்றைக் கட்டிக்கொண்டவர் மது அருந்துவதில்லை எனும் நம்பிக்கை உள்ளது.

துணை தெய்வம்

செல்லாண்டியம்மன் இங்கு துணை தெய்வம்.

திருவிழா

ஆடி மாதம் இக்கோவிலில் திருவிழா களைகட்டுகிறது

மேலும் பார்க்க

கருப்பசாமி

உசாத்துணை