குடுமியான்மலை சிகாகிரீசுவரர் கோவில்
சிகாகிரீஷ்வரர் கோவில் என்பது இந்தியாவிலுள்ள, தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், குடுமியான்மலையில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும். இக்கோவிலின் மூலவர் சிகாநாதர் என அழைப்படுகிறார்.[1] இவருக்கு குடுமிநாதர் என்றொரு பெயரும் உண்டு.
நிர்வாகம்
இக்கோவில் இந்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
தெய்வங்கள்
இக்கோவிலில் சொர்ணாம்பிகை அம்மன், விநாயகர், ஹனுமன், தெட்சிணாமூர்த்தி, பைரவர், பெருமாள் மற்றும் மலையின் உச்சியில் முருகக்கடவுள் போன்ற தெய்வங்கள் உள்ளது.
இசைக்கல்வெட்டு
மகேந்திரவர்ம பல்லவனுடைய இசைக்கல்வெட்டு இக்கோயிலில் உள்ளது. [1] சரிகமபதநி குறித்த குறிப்புகள் இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது.
குடவரைக்கோவில்
மலையினைக் குடைந்து, குடவரைக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குடவரை பல்லவர் காலத்தைச் சேர்ந்தது. இங்கு ஆயக்கலைகள் 63ஐயும் விளக்கக்கூடிய கற்சிற்பங்கள் இக்கோவிலில் இடம்பெற்றுள்ளது.
பங்குனி உத்திர திருவிழா
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்தில் தெப்ப உற்சவத் திருவிழா நடைபெறுகிறது. [1]