கீழப்புளியூர் நாகநாதசுவாமி கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கீழப்புளியூர் நாகநாதசுவாமி கோயில் (Keelappuliyoor naganathasamy temple) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் குழிக்கரை அருகில் கீழப்புலியூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் புளிய மரங்கள் அதிகம் இருந்ததால் இவ்வூர் புளிப்பூர் என்று அழைக்கப்பட்டு பின்னர் கீழப்புளியூர் என்ற பெயரைப் பெற்றிருக்கலாம். [1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக நாகநாதர் உள்ளார். அவர் சுயம்புவாக உருவானவர் ஆவார். இங்குள்ள இறைவி புஷ்பவள்ளி ஆவார். இக்கோயிலின் தல மரமாக கொன்றை மரம் காணப்படுகிறது. [1]

அமைப்பு

கோயில் கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. கோயிலில் ராஜ கோபுரம் உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், நர்த்தன விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், சனீஸ்வரன், சூரியன், சந்திரன் ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேசுவரர் உள்ளார். இக்கோயிலின் தீர்த்தமாக பிரம்ம தீர்த்தம் விளங்குகின்றது. பங்குனி மாதத்தில் 21, 22, 23 ஆகிய நாள்களில் மூலவரின் மீது சூரிய ஒளியானது காலை 6.00 முதல் 6.15 மணி வரை விழுவது இக்கோயிலின் சிறப்பாகும். [1]

திருவிழாக்கள்

பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், மாசி மகம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. [1]

மேற்கோள்கள்