கிடாத்தலைமேடு துர்காபுரீசுவரர் கோயில்
கிடாத்தலைமேடு துர்காபுரீசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கிடாத்தலைமேடு என்னுமிடத்தில் அமைந்துள்ளது. கிடாத்தலையோடு கூடிய அசுரன் தேவர்களைக் கொடுமைப்படுத்தியபோது அவர்கள் வந்து அபயம் அடையவே அம்பாள் அவனுடைய தலையை வெட்டினாள். அந்தத் தலை விழுந்த இடம் கிடாத்தலைமேடு என்றழைக்கப்படுகிறது. [1]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக துர்காபுரீசுவரர் உள்ளார். இறைவி காமுகாம்பாள் எனப்படுகிறார். அம்பாள் கடாத்தலைவனைக் கொன்ற பாவம் தீர இங்கு வந்து இறைவனை வழிபட்டாள். அவள் வழிபட்ட லிங்கமே துர்காபுரீசுவரர் என்றானது. [1]
அமைப்பு
இக்கோயிலில் வேலைப்பாட்டுடன்கூடிய நந்தி, பைரவர், சூரியன், நாகர், மாரியம்மன், சாமுண்டீசுவரி, துர்க்கை ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. துர்க்கை வடக்கு நோக்கிய நிலையில் கிடாத்தலையின்மீது நின்ற நிலையில் உள்ளார். கைகளில் சக்கரம், பாணம், வில், கத்தி, கேடயம் போன்றவ்ற்றைக் கொண்டுள்ளார். சக்ர பூர்ண மகாமேருவும் அமைக்கப்பட்டுள்ளது. துர்க்கையம்மன் சன்னதிக்கு எதிராக 20 அடி உயரத்தில் உள்ள சூலத்தினை சாமுண்டீசுவரியாக வழிபடுகின்றனர். [1]
திருவிழாக்கள்
பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி, பௌர்ணமி போன்ற விழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. [1]