காஞ்சிபுரம் மல்லிகார்சுனர் கோயில்
காஞ்சிபுரம் மல்லிகார்சுனர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
ஊர்: | காஞ்சிபுரம் |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மல்லிகார்ச்சுனேஸ்வரர். |
காஞ்சிபுரம் மல்லிகார்சுனர் கோயில் எனும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். காஞ்சி சர்வதீர்த்தம் தெங்கரையில் உள்ள கிழக்கு பார்த்த சன்னதியான இக்கோயில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது. (இக்கோயில் பற்றிய விபரம் சரிவர தெரியவில்லை.)[1]
வழிப்பட்டோர்
ஈசுவரன் மல்லிகார்சுனர் என்னும் பெயருடன் எழுந்தருளி இருக்கின்றார். இது பல முனிவர்கள் பூசித்து வழிபட்ட தலமாகும்.[2]
அமைவிடம்
இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியின் காஞ்சி சர்வதீர்த்தம் தென்கரையில் உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் 1 மைல் தூரமுள்ள காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம்.[3]
போக்குவரத்து
- வான்வழி: வானூர்தி சேவை இல்லை; உலங்கு வானூர்தி மூலம் காஞ்சிபுரம் வந்தடைய, காஞ்சியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஏனாத்தூர் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அகத்திலுள்ள உலங்கூர்தி இறங்குதளத்தில் இறங்கி சீருந்து மூலம் இக்கோயிலை அடையலாம்.
- இரும்புத் தடம்: தொடருந்து மூலாமாக; தலைநகர் சென்னையிலிருந்து செங்கல்பட்டு மார்க்கமாகவும், திருப்பதியிலிருந்து அரக்கோணம் மார்க்கமாகவும், காஞ்சி தொடருந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்து 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இக்கோயிலை, சீருந்து மூலமாகவும், தானியுந்து மூலமாகவும் சென்றடையலாம்.
- சாலை வழி: பேருந்திலோ, அல்லது சீருந்துலோ, காஞ்சி வந்தடைய நான்கு திசையில் சாலை வழியுள்ளன; வடகிழக்கில், சென்னையிலிருந்து (75 கிலோமீட்டர்) திருப்பெரும்புதூர் வழியாகவும் ; தென்கிழக்கில், செங்கல்பட்டிலிருந்து (40 கிலோமீட்டர்) வாலாசாபாத் வழியாகவும் ; வடமேற்கில், விழுப்புரத்திலிருந்து (80 கிலோமீட்டர்) வந்தவாசி வழியாகவும்; தென்மேற்கில், பெங்களுரிலிருந்து (275 கிலோமீட்டர்) வேலூர் வழியாகவும் இக்கோயில் நகரை வந்தடையலாம்.[4]
மேற்கோள்கள்
- ↑ "shaivam.org | மல்லிகார்ஜுனர் கோயில்". Archived from the original on 2018-02-06. பார்க்கப்பட்ட நாள் 2016-04-18.
- ↑ "palsuvai.net|காஞ்சிபுர சிவலிங்கங்கள்|24. ஸ்ரீ மல்லிகார்ஜூனர்". Archived from the original on 2016-06-29. பார்க்கப்பட்ட நாள் 2016-04-18.
- ↑ dinaithal.com | மல்லிகார்ஜுனர் கோயில்
- ↑ tripadvisor.in 15 temples in Kanchipuram