காஞ்சிபுரம் மச்சேசுவரர் கோயில்
காஞ்சிபுரம் மச்சேசம். | |
---|---|
பெயர் | |
பெயர்: | காஞ்சிபுரம் மச்சேசம். |
அமைவிடம் | |
ஊர்: | காஞ்சிபுரம் |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மச்சேசுவரர். |
காஞ்சிபுரம் மச்சேசுவரர் கோயில் (மச்சேசம்) என்று அறியப்படும் இது, காஞ்சியிலுள்ள சிவகோயில்களில் ஒன்றாகும் . மேலும்,திருமால் மச்ச (மீன்) அவதாரத்தில் வழிபட்ட தலமென்பதால். இது மச்சேசம் எனப்பட்டது. இக்கோவில் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது [1]
இறைவர், வழிபட்டோர்
- இறைவர்: மச்சேஸ்வரர்.
- வழிபட்டோர்: திருமால் (மச்சாவதாரத்தில்).
தல பெருமை
இக்கோயில் மூலவரறையில் (மூலஸ்தானம்), இவ்விறைவர் மச்சேசுவரர் சிவலிங்க வடிவில் கிழக்கு திசைநோக்கி அருள்பாலிக்க, பிற மூர்த்தங்களாக சீனிவாசப் பெருமாள், ராமர்-லட்சுமணர், சிறு திருவடி, பெரு திருவடி, மற்றும் அட்ட லட்சுமி ஆகியோர்களின் சந்நிதிகள் இக்கோயிலகத்தில் காணப்படுகிறது.
தல வரலாறு
சோமுகாசுரன் எனும் அசுரன் வேதங்களை களவாடிச் சென்று கடலுக்கடியில் மறைந்துகொண்டான். படைப்புத் தொழிலுக்கு தடை வருமோயென அஞ்சிய பிரமன் [[திருமால்|திருமாலிடம் முறையிடுகிறார். இச்செயலை கேட்டறிந்த திருமால், பெருஞ்சுறா (மச்ச(மீன்) உருவங்கொண்டு கடலுக்கடியுள் சென்று சோமுகாசுரனை வதந்கொண்டு வேதங்களை மீட்கிறார். அவனுக்கு துணைவந்த பஞ்சகனைக் கொன்று, அவன் எலும்பை பாஞ்சசன்யமாக கொண்டார். இம்முயற்சியில் வெற்றிபெற லிங்கம் தாபித்து திருமால் வழிப்பட்டார். அச்சிவலிங்கமே மச்சேசுவரர் என்பது தல வரலாறு.[2]
அமைவிடம்
தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் நடுப்பகுதியில் (பெரிய காஞ்சிபுரம் (சிவகாஞ்சி) கிழக்கு ராசவீதியில் மையமாக கிழக்கு நோக்கி உள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் அருகேயே வடக்கே இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
- ↑ Project Madurai, 1998-2008 | காஞ்சிப் புராணம் | 53. மச்சேசப் படலம் 1756-1765
- ↑ templesinsouthindia | அருள்மிகு மச்சேஸ்வரர் கோயில் காஞ்சி
- ↑ "shaivam.org | காஞ்சி சிவத் தலங்கள் | (மச்சேசம்) மச்சேஸ்வரர்". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-03-05.