காஞ்சிபுரம் சர்வ தீர்த்த முத்தி மண்டபம்
காஞ்சிபுரம் சர்வ தீர்த்த முத்தி மண்டபம் எனும் பெயர் பெற்ற இது, காஞ்சிபுரத்திலுள்ள கோயில் மண்டபங்களில் ஒன்றாகும். இது, சர்வ தீர்த்தம் (குளத்தின்) மேற்கரை மண்டபமாக தாபிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்மண்டபத்தின் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]
தல வரலாறு
காலையில் எழுந்தவுடன் இம்மண்டபத்தை மனதில் நினைப்பவர்கள் பாசத்தினின்றும் விடுபட்டு வீடுபேறடைவர் என்பது வரலாறாகும்.[2]
தல விளக்கம்
முத்தி மண்டபம், உலகெலாம் ஈறுசேர் பொழுதினும் இறுதியின்றியே மாறிலாதிருந்திடு வளங்கொள் காஞ்சியில் மூன்று மண்டபங்கள் உள்ளன. ஆடிசன்பேட்டை முத்தீசர் சந்நிதியில் இருக்கும் முத்திமண்டபம் ஒன்று (1), சருவதீர்த்தத்தின் மேலைக் கரையில் உள்ள முத்திமண்டபம் ஒன்று (2); திருவேகம்பர் திருக்கோயிலுக்கு வெளியில் பதினாறுகால் மண்டபத்தினை அடுத்து, ‘இராமேச்சுரம்’ என்னும் தலத்தில் இராமன் திருமுன்பு பரமானந்த மண்டபம் ஒன்று (3). இம் மூன்று மண்டபங்களையும் விடியற் காலையில் எழுந்து அன்போடு நினைப்பவர் பல தளையினின்றும் விடுபட்டு முத்தியை அடைவர்.[3]
தல பதிகம்
- பாடல்: (முத்தி மண்டபம்)
- மண்டப வருநாள் செல்லாக் காஞ்சிமா நகரின் மூன்று
- மண்டபந் திகழும் முத்தீச் சரத்தெதிர் வயங்கும் முத்தி
- மண்டபம் ஒன்று சார்வ தீர்த்தத்தின் மருங்கு முத்தி
- மண்டபம் ஒன்று கண்டோர் தமக்கெலாம் வழங்கு முத்தி.
- பொழிப்புரை:
- உலகழியுங்காலமும் அழியாத காஞ்சிமா நகரில் மூன்று மண்டபங்கள்
- விளங்கும்: முத்தீச்சரத் தெதிரில் விளங்கும் முத்தி மண்டபம் ஒன்று; சருவ
- தீர்த்தத்தின் மேற்குக் கரையில் மண்டபம் ஒன்று; கண்டோர் யாவர்க்கும்
- முத்தியை நல்கும்.[4]
அமைவிடம்
தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் வேலூர் செல்லும் சாலையிலுள்ள சர்வதீர்த்தத்தின் (குளத்தின்) மேற்கு கரையில் இம்மண்டபம் தாபிக்கப்பட்டள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் தென்மேற்கு திசையில், சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. மற்றும் காஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து, காஞ்சி கச்சபேசுவரர் கோயிலின் வழியாக காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் இந்த மண்டபத்தை அடையலாம்.[5]
மேற்கோள்கள்
- ↑ projectmadurai.org | காஞ்சிப் புராணம் | 46. சர்வ தீர்த்தப்படலம் (1619 - 1644) | 1642 முத்தி மண்டபம்
- ↑ "shaivam.org | காஞ்சி சிவத்தலங்கள் | முத்திமண்டபம்". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-03-24.
- ↑ tamilvu.org | காஞ்சிப் புராணம் | திருத்தல விளக்கம் | முத்தி மண்டபம் | பக்கம்: 830 - 831.
- ↑ tamilvu.org | காஞ்சிப் புராணம் | சருவதீர்த்தப் படலம் | பாடல் 24| பக்கம்: 485
- ↑ "shaivam.org | சர்வ தீர்த்தக் கரை, முத்திமண்டபம்". Archived from the original on 2018-02-06. பார்க்கப்பட்ட நாள் 2016-03-24.