காஞ்சிபுரம் கூரம் வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரம் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

காஞ்சிபுரம் கூரம் வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரம் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் கூரம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் தல மரம் வில்வம் ஆகும்.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரர் உள்ளார். சிவலிங்கத்தின்மீது பீடம் சதுர வடிவில் உள்ளது.[1]

வரலாறு

இக்கோயில் ராமர் வழிபட்டதாகும். தினமும் மாலையில் சூரியன் மறையும் வேளையில் கதிர்கள் மூலவர் விழும்வகையில் கோயில் உள்ளது. இக்கோயில் தூங்கானைமாட வடிவத்தில் உள்ளது. மண்டபத்தூண்களில் கல்வெட்டுகள் உள்ளன. பரமேச்வர வர்மன், ராஜசிம்மன், நந்திவர்மன், நிருபதுங்கன் ஆகிய பல்லவ மன்னர்கள் இவ்வூரின்மீது ஈடுபாடு செலுத்தினர். ஏழாம் நூற்றாண்டில் முதலாம் பரமேச்வர வர்ம பல்லவர் காலத்தில் வித்ய வினீத பல்லவர் என்னும் குறுநில மன்னர் இவ்வூரில் நிலத்தை விலைக்கு வாங்கி இக்கோயிலைக் கட்டியுள்ளார். ஆதலால் இவ்வூர் வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரம் எனப்படுகிறது.[1]

இக்கோயிலின் மற்றொரு வரலாறாக மா. இராசமாணிக்கனார் பின் வருமாரு விவரிக்கிறார்.[2] "பரமேசுவரவர்மன் சிறந்த சிவ பத்தன். இவன்தன் பெருநாட்டின் பல பாகங்களில் சிவன் கோவில்களக் கட்டினான்; பலவற்றைப் புதுப்பித்தான். இவன் கூரம் என்ற சிற்றுரில் சிவன்கோவில் ஒன்றைக் கல்லாற்கட்டினான். அதற்கு இவ்வரசன் 'பரமேசுவர மங்கலம்' எனத் தன் பெயர் பெற்ற சிற்றுரை மானியமாக விட்டான். அங்குக் கட்டப்பட்ட கோவில் வித்யா விநீத பல்லவ-பரமேசுரவ க்ருகம் எனப் பெயர்பெற்றது. இக்கோவிலே தமிழகத்து முதற்கற்கோவில் ஆகும்.[3]

இப்பொழுது பெரிய சிவன் கோவில்களில் நடக்கும் எல்லா வழிபாடுகளும் இவன் காலத்திலும் நடந்து வந்தன என்பதைக் கூரம் பட்டயத்தால் அறியலாம். கோவிலில் பாரதம் சொல்லச் செய்த அரசன் இவன், கூரம் பட்டய முதல் இரண்டு சுலோகங்கள் பரமேச்சுரனை (கடவுளை) வாழ்த்தியுள்ளன."

விழாக்கள்

பிரதோஷம், மகாசிவராத்திரி, சிவராத்திரி,பௌர்ணமி உள்ளிட்ட விழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 அருள்மிகு வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரம் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
  2. மா. இராசமாணிக்கனார் (முதற் பதிப்பு 1944; மறு அச்சு 2000). பல்லவர் வரலாறு. சென்னை: தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். pp. 140. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. C.Srinivasachari’s History & Institutions of the Pallavas p.15.