காஞ்சிபுரம் கண்ணேசர் கோயில்
காஞ்சிபுரம் கண்ணேசம். | |
---|---|
பெயர் | |
பெயர்: | காஞ்சிபுரம் கண்ணேசம். |
அமைவிடம் | |
ஊர்: | காஞ்சிபுரம் |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கண்ணேசர். |
காஞ்சிபுரம் கண்ணேசர் கோயில் (கண்ணேசம்) என்று வழங்கப்படும் இது, காஞ்சியிலுள்ள சிவகோயில்களில் ஒன்றாகும் . மேலும், திருவேகம்பத்தில் நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதி இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இக்கோவில் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டுள்ளன.[1]
இறைவர், வழிபட்டோர்
- இறைவர்: கண்ணேசர், கண்ணேஸ்வரர்.
- வழிபட்டோர்: திருமால்.
தல வரலாறு
திருப்பாற்கடலில் தோன்றிய நஞ்சு உடம்பைத்தாக்க, கரிந்து வெதும்பிய திருமால் காஞ்சியை அடைந்து, கண்ணலிங்கத்தை பிரதிட்டை செய்து வழிபட்டார். அதுவே கண்ணேசம் எனப்பட்டது. வழிபாட்டின் இறுதியில் இறைவன் திருமாலுக்கு காட்சி தந்து "திருவேம்கத்தில் எம் சந்நிதிக்கு எதிரில் திருமுடியிலுள்ள சந்திரனுக்கு அருகிலிருந்து இவ்வெப்பு (சுர நோய்) நீங்கப் பெறுவாயாக" என்றருளிச் செய்தார். திருமாலும் அவ்வாறே இருந்து அவ்வெப்பு (சுர நோய்(சூடு) நீங்கப்பெற்று, நிலாத்துண்டப் பெருமாள் என்னும் பெயருடன் விளங்குகிறார்.[2]
தல விளக்கம்
கண்ணேசம் (கண்ணன்-கரியன்) கூறும் விளக்கமாவது திருப்பாற்கடலில் எழுந்த விடத்தால் கரிந்து வெப்புற்ற திருமால் ‘கண்ணேசர்’ என்ற பெயரால் சிவலிங்கம் நிறுவிப் போற்றி அப்பெருமான் ஆணைப்படி திருவேகம்பத்தில் திருமுடியில் உள்ள நிலவின் அமுத கிரணத்தால் வெப்பம் நீங்கி நிலாத்துண்டப் பெருமாள் என்னும் திருநாமம் பெற்றனர். கண்ணேசத்தில் வழிபாடு செய்வோர் மேலுலகில் வாழ்வர். இக்கண்ணேசம் செங்கழுநீரோடை வீதியில் மொட்டைக் கோபுரத்திற் கெதிரில் உள்ளது..[3]
அமைவிடம்
தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் வடப்பகுதியில் (பெரிய காஞ்சிபுரம் (சிவகாஞ்சி) வடக்கு இராசவீதி எனப்படும் செங்கழுநீரோடைத் தெருவில் மொட்டைக் கோபுரத்திற் கெதிரில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பூக்கடை சத்திரம் வழியாக காஞ்சி சங்கர மடம் செல்லும் வழியிலும், மற்றும் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலின் வடக்கு வாசல் அருகிலும் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
- ↑ Project Madurai, 1998-2008 | காஞ்சிப் புராணம் | 55. கண்ணேசப் படலம் 1775-1786
- ↑ "shaivam.org | (கண்ணேசம்) கண்ணேசர்". Archived from the original on 2016-04-07. பார்க்கப்பட்ட நாள் 2016-03-06.
- ↑ www.tamilvu.org | காஞ்சிப் புராணம் | கண்ணேசம்ம் | பக்கம்: 827.
- ↑ dinamalar.com | தினமலர் | திருமுறை வழிபாடு கண்ணேசர் கோவில்.