ஒரு கிடாயின் கருணை மனு
ஒரு கிடாயின் கருணை மனு | |
---|---|
இயக்கம் | சுரேஷ் சங்கையா |
தயாரிப்பு | எரோசு இன்டர்நேசனல் |
கதை | சுரேஷ் சங்கையா |
இசை | ஆர். ரகுராம் |
நடிப்பு | விதார்த் ரவீனா ரவி ஜார்ஜ் மார்யன் ஜெயராஜ் பெரியமாயத்தேவர் ஹலோ கந்தசாமி கே. ஜி. மோகன் |
ஒளிப்பதிவு | ஆர். வி. சரண் |
படத்தொகுப்பு | பிரவீன் கே. எல் |
கலையகம் | எரோசு இன்டர்நேசனல் |
வெளியீடு | 2 ஜூன் 2017 |
ஓட்டம் | 116 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்l |
ஒரு கிடாயின் கருணை மனு (Oru Kidayin Karunai Manu) 2017 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். சுரேஷ் சங்கையா எழுதி இயக்கிய இந்தத் திரைப்படத்தில் விதார்த் , ரவீனா ரவி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர். எராசு இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடம் சிறந்த படம் என்ற பாராட்டுகளைப் பெற்றது.[1][2][3]
கதைச்சுருக்கம்
புதியதாக திருமணம் ஆன நாயகன் ராமமூர்த்தி (விதார்த்). அவர் தன் குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களுடன் ஆட்டுக் கிடாயைப் பலியிட்டுக் குலதெய்வத்துக்கு நேர்த்திக்கடன் செலுத்த சரக்குந்தில் கிளம்புகின்றனர். பயண வழியில் தாங்கள் செய்யாத விபத்துக் கொலையை தாங்கள் செய்ததாக கருதும் அம்மக்கள். அதை மறைக்கச் செய்யும் குளறுபடிகள் அதனால் ஏறபடும் விளைவுகளே படத்தின் கதை
நடிகர்கள்
- விதார்த் - ராமமூர்த்தி
- ரவீனா ரவி - சீதா
- ஜெயராஜ் பெரியமாயத்தேவர் - சீதாவின் தந்தை
- ஜார்ஜ் மரியான் - வழக்கறிஞர் வாசுதேவன்
- ஹலோ கந்தசாமி - அரும்பா
- கிருஷ்ணமூர்த்தி
- கே.ஜி. மோகன் - செவல்
இசை
இசையமைப்பாளர் ஆர். ரகுராம்
பாடலாசிரியர்கள் வேல்முருகன், வி.குருநாதன்
வ.எண் | பாடல் | பாடகர்கள் | கால அளவு |
---|---|---|---|
1 | எங்கோ இருக்குற | வி.எம்.மகாலிங்கம் | 2.58 |
2 | கொலைச்சிந்து | ஹலோ கந்தசாமி | 3.31 |
3 | நான் கெட்ட கேடு | எம்.எஸ்.நேரு | 2.01 |
தயாரிப்பு
ஜூலை 2015 இல் இயக்குனர் மணிகண்டனின் உதவி இயக்குனர் சுரேஷ் சங்கையா ஒரு கிடாயின் கருணை மனு என்ற திரைப்படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியானது. பிப்ரவரி 2016 இல் நடிகர் விதார்த் கதாநாயகனாக நடிக்கும் அறிவிப்பு வெளியானது.[4][5] எராசு இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஏப்ரல் 2016 இல் படப்பிடிப்பு துவங்கியது. பல திரைப்படங்களில் பின்னணிக் குரல் கொடுத்த ரவீனா ரவி இப்படத்தின் கதாநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார். "கடவுளுக்கு காணிக்கையாக வெட்டப்படும் ஆட்டை மையமாகக் கொண்டு அதன் பார்வையில் சொல்லப்பட்டுள்ள கதை" என இயக்குநர் குறிப்பிடுகிறார். ராஜபாளையம் மற்றும் அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
2016 ஆம் ஆண்டில் படக்குழு பெர்லின் திரைப்படத் திருவிழாவிற்கு அனுப்பியது.[6] 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற 15 ஆவது சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் இந்தத் திரைப்படம் சிறந்த தமிழ்படமாகத் தேர்வு செய்யப்பட்டது.
வரவேற்பு
இது 02 சூன், 2017 ல் வெளியாகி சினிமா விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது.[7][8]
சான்றுகள்
- ↑ "கிடாயின் கருணை மனு". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/oru-kidayin-karunai-manu/movie-review/58940257.cms.
- ↑ "Letting a goat emote!" (in en). www.deccanchronicle.com/. 2017-05-29. http://www.deccanchronicle.com/entertainment/kollywood/290517/letting-a-goat-emote.html.
- ↑ "A story from the point of view of a goat - Times of India". timesofindia.indiatimes.com. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/A-story-from-the-point-of-view-of-a-goat/articleshow/51927066.cms. பார்த்த நாள்: 2016-11-27.
- ↑ "Manikandan next to be a comedy entertainer - Tamil Movie News - IndiaGlitz.com". indiaglitz.com. http://www.indiaglitz.com/manikandan-next-to-be-a-comedy-entertainer-tamil-news-137585.html. பார்த்த நாள்: 2016-11-27.
- ↑ "Vidharth's next will go on floors from March". magzter.com. https://www.magzter.com/news/74/218/022016/03aes. பார்த்த நாள்: 2016-11-27.
- ↑ "Raveena’s maiden film Oru Kidayin Karunai Manu sent to Berlin Film Festival". behindwoods.com. http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/raveenas-maiden-film-oru-kidayin-karunai-manu-sent-to-berlin-film-festival.html. பார்த்த நாள்: 2016-11-27.
- ↑ Oru Kidayin Karunai Manu Movie Review {4/5}: Critic Review of Oru Kidayin Karunai Manu by Times of India, retrieved 2019-01-18
- ↑ Subramanian, Anupama (2017-06-03). "Oru Kidayin Karunai Manu movie review: A sharp and intelligent screenplay" (in en). https://www.deccanchronicle.com/entertainment/movie-reviews/030617/oru-kidayin-karunai-manu-movie-review-a-sharp-and-intelligent-screenplay.html.