ஒரத்தூர் மார்க்கசகாயேசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஒரத்தூர் மார்க்கசகாயேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் கடலூர் மாவட்டத்தில் ஒரத்தூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் தில்லைவனம் என்றழைக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நேர் பின்புறத்தில் இக்கோயில் உள்ளது.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக மார்க்கசகாயேசுவரர் உள்ளார். இறைவி மரகதவல்லி ஆவார். இவ்வூரின் எல்லையில் ஓடும் வெள்ளாறு இங்கு வளைந்து செல்கிறது. அதுவே இக்கோயிலின் தீர்த்தமாகும். [1]

அமைப்பு

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் அமைப்பில் சனீசுவரர் கிழக்கு நோக்கிய நிலையில் சன்னதியின் முன் புறம் உள்ளார். சித்தி விநாயகர், கஜலட்சுமி, சண்டிகேசுவரர், நவக்கிரகம், பைரவர, சூரியன் ஆகியோர் திருச்சுற்றில் உள்ளனர். இறைவி தெற்கு நோக்கிய நிலையில் தனி சன்னதியில் உள்ளார். முன் மண்டபத்தில் நடராசர் சன்னதி உள்ளது. சுந்தரர் தன் தலப்பயணத்தில் விருத்தாச்சலம் சென்று கொண்டிருந்தபோது இத்தலத்தைக் கடந்து சென்றார். அப்போது வழி தெரியாமல் திகைத்தபோது அங்கு வந்த ஒரு முதியவர் கூடலையாற்றூர் வரை சென்று வழிகாட்டினார். நன்றி சொல்ல முயலும்போது அவர் மறைந்துவிடவே தனக்கு வழிகாட்டியவர் சிவனே என உணர்ந்தார்.சுந்தரருக்கு வழிகாட்டிய தலத்தில் அமைந்துள்ள இறைவன் மார்க்கசகாயேசுவரர் என்றழைக்கப்படுகிறார். [1]

விழாக்கள்

சிவராத்திரி, திருக்கார்த்திகை, ஐப்பசியில் அன்னாபிசேகம், மார்கழியில் திருவாதிரை உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகின்றன. [1]

மேற்கோள்கள்