ஒட்டக்குடி திருநங்காளீசுவரர் கோயில்
Jump to navigation
Jump to search
ஒட்டக்குடி திருநங்காளீசுவரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
இக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தில்அமைந்துள்ளது.[1]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக திருநங்காளீசுவரர் உள்ளார். இங்குள்ள இறைவி காமக்கோட்டத்து நாச்சியார் ஆவார். [1]
அமைப்பு
இக்கோயிலின் ராஜ கோபுரத்தின் கிழக்கே வாயில் அமைந்துள்ளது. நுழைவாயிலின் இடப்புறம் காளி சன்னதி தனியாக காணப்படுகிறது. செல்வ கணபதி, பைரவர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சனீசுவரன் ஆகியோர் காணப்படுகின்றனர். ஈசான மூலையில் சண்டிகேசுவரரும், சண்டிகேசுவரியும் உள்ளனர். [1]
திருவிழாக்கள்
பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை, ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம், சிவராத்திரி, மாசி மகம் போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. [1]