எஸ். புதூர் சனத் குமாரேசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

எஸ். புதூர் சனத் குமாரேசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

திருவிடைமருதூர் வட்டத்தில் எஸ்.புதூரில் இக்கோயில் அமைந்துள்ளது. [1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக சனத் குமாரேசுவரர் உள்ளார். இங்குள்ள இறைவி சௌந்தரநாயகி ஆவார். [1]

சிறப்பு

ஒரு முறை குபேரன் செய்த தவறால் தர்மம் அவரை விட்டு விலகிச் சென்றுவிடுகிறது. தன்னுடைய சாபம் நீங்குவதற்காக சப்தரிஷிகளிடம் கேட்க, அவர்கள் திருத்தண்டிகைபுரத்திற்குச் செல்லும்படி கூறினர். திருத்தண்டிகை என்றால் இறைவன் உலா வரும் பல்லக்கு என்று பொருள்படும். அத்தகு பெருமை பெற்ற இவ்வூருக்கு வந்து இக்கோயிலில் உள்ள சோம தீர்த்தத்தில் நீராடி, சாபம் நீங்கி, இழந்த செல்வத்தைப் பெற்றார். [1]

திருவிழாக்கள்

பௌர்ணமி, சிவராத்திரி சிறப்பான விழாக்களாக இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. [1]

மேற்கோள்கள்