எய்யலூர் சொர்ணபுரீசுவரர் கோயில்
எய்யலூர் சொர்ணபுரீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
இக்கோயில் கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் அருகில் எய்யலூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. [1]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக ஓதனேசுவரர் உள்ளார். திரேதா யுகத்தில் ராமன் வழிபட்டவராக இவர் கருதப்படுகிறார். [1]
வரலாறு
ராமர், சீதை, லட்சுமணர் காட்டில் இருந்தபோது ராவணன் சீதையைக் கடத்திச் சென்றார். சீதையைத் தேடி ராமன் சென்றபோது ஜடாயு சிறகிழந்த இடமான சிறகிழந்தநல்லூரைக் கண்டார். ராமன் கண்ணின் பட்ட நாரை ஒன்று சீதையை ராவணன் கடத்திச் சென்றதை கூறியது. அவ்விடம் திருநாரையூர் ஆனது. புட்பக விமானத்தில் சென்ற பெண் ஒரு பூவினை கீழே போட்டுச் சென்றதாகக் கேள்விப்பட்டார். அந்த இடம் பூவிழந்தநல்லூர் ஆகும். இவ்வாறு சென்றபோது கடம்பூர், வேலம்பூண்டி, ஈச்சம்பூண்டி ஆகிய ஊர்களைக் கடந்து சிறுகாட்டூர் வந்தபோது கொள்ளிடத்தில் வெள்ளம் காணப்பட்டது. மக்களை வெள்ளத்திலிருந்து காப்பாற்றவும், பயணத்தினைத் தொடரவும் ராமர் வில்லை எடுத்து அம்பை தொடுத்தார். அம்பு எய்த இடமானதால் எய்யலூர் எனப்பட்டது. வெள்ளம் குறைந்து லிங்கத்திருமேனி வெளிப்பட பூசை செய்துவிட்டு பயணத்தைத் தொடர்ந்தனர்.[1]
விழாக்கள்
பிரதோஷம், சிவராத்திரி, ராம நவமி உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகின்றன. [1]