ஊத்துக்காடு மகாலிங்கேசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஊத்துக்காடு மகாலிங்கேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் அருகே ஊத்துக்காடு என்னுமிடத்தில் நடுத்தெருவில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக மகாலிங்கேசுவரர் உள்ளார். மூலவர் பாணமாகக் காட்சியளிக்கிறார். இங்குள்ள இறைவி பெரியநாயகி ஆவார். சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.[1]

அமைப்பு

ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கம்பவர்மன் என்னும் மன்னரால் இக்கோயில் கட்டப்பட்டது. நந்தி மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், மூலவர் சன்னதி, இறைவி சன்னதியைக் கொண்டு அமைந்துள்ள இக்கோயிலில் கலை நுட்பங்களைக் காணமுடியும். அழகிய தூண்களும், மணி மண்டபமும் இக்கோயிலில் காணப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்