ஊத்துக்காடு காளிங்கநர்த்தனர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஊத்துக்காடு காளிங்கநர்த்தனர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது.

அமைவிடம்

ஆவூர்-திருக்கருக்காவூர்-திட்டை சாலையில் கும்பகோணத்திலிருந்து 14 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குச் செல்ல கும்பகோணம் மற்றும் ஆவூரிலிருந்து பேருந்துகள் உள்ளன. [1]

மூலவர்

இக்கோயிலின் கருவறையில் காளிங்கநர்த்தனர் மூலவராக உள்ளார்.

சிறப்பு

காளிங்கநர்த்தனர், சர்ப்பத்தின் மேல் நின்றபடி ஆடுகின்றார். அவ்வாறு ஆடும்போது சர்ப்பத்துக்கும் கண்ணனுக்கும் இடையே மெல்லிய, நூலிழை அளவிலான இடைவெளியே உள்ளது. அதுவே இங்குள்ள திருமேனியின் சிறப்பாகும்.[1]

குடமுழுக்கு

தென் கோகுலம் என்று அழைக்கப்படும் இக்கோயிலில் 1988இல் குடமுழுக்கு நடைபெற்றது. அக்டோபர் 26, 2015இல் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.[2]

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்