கோட்டை கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
(ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதன் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஈரோடு கோட்டை ஸ்ரீ கஸ்தூரி அரங்கநாதன் திருக்கோயில்[1]
புவியியல் ஆள்கூற்று:11°20′32″N 77°43′27″E / 11.342337°N 77.724078°E / 11.342337; 77.724078
பெயர்
புராண பெயர்(கள்):மூவேந்தர் சதுர்வேதிமங்கலம், கஸ்தூரி ரங்கபுரம்
பெயர்:ஈரோடு கோட்டை ஸ்ரீ கஸ்தூரி அரங்கநாதன் திருக்கோயில்[1]
அமைவிடம்
ஊர்:திருவரங்கம், ஈரோடு கோட்டைப் பகுதி
மாவட்டம்:ஈரோடு
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அரங்கநாதர் (மூவேந்தர் சதுர்வேதிமங்கலம் பள்ளி கொண்ட பெருமாள்)
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:ஏராளம் உண்டு

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதன் திருக்கோயில் ஈரோட்டில் உள்ள வைணவத் திருத்தலம். கொங்கு நாட்டில் சோழர்களால் அமைக்கப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சரித்திரப் பெருமை கொண்ட திருக்கோயில்.[2]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 193 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 11°20'32.4"N, 77°43'26.7"E (அதாவது, 11.342337°N, 77.724078°E) ஆகும்.

தலவரலாறு

துர்வாச முனிவர் தாம் திருமாலைக் கோபத்தில் அவமதித்த பிழைக்காக வருந்தி கடுந்தவமிருந்து மீண்ட பொழுது ’ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தின் வடிவில் அமைத்த திருக்கோயில்.

ஸ்ரீ மகாலட்சுமி

பிருகு மகரிஷியின் பெண்ணான திருமகள் இத்திருத்தலத்தில் தலவிருட்சமாக வில்வமர வடிவில் உள்ளார்.

ஆஞ்சநேயர்

இத்திருத்தல ஆஞ்சநேயர் அளவற்ற சக்தி வாய்ந்தவராகக் குறிப்பிடப்படுகின்றார்.

கல்வெட்டுகள்

  • இத்தலப்பெருமானுக்கு சேவை செய்யும் பெரியோர்களை ’ஸ்ரீவைஷ்ணவ கண்காணி செய்வார்’ என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
  • திருவேங்கடமுடையான் சந்நிதியின் நுழைவாயில் அமைத்தவர் தாயஞ்சாத்தன் எனும் செய்தி கி.பி.1265 ஆம் ஆண்டின் கல்வெட்டு மூலம் தெரியவருகின்றது. (மதுரை வீரபாண்டியன் காலம்)
  • கல்வெட்டுகளில் ஈரோடு மூவேந்தர் சதுர்வேதிமங்கலம் என்றும் கஸ்தூரி ரங்கபுரம் என்றும் முன்பு வழங்கப்பட்டது தெரியவருகின்றது.

மேற்கோள்கள்

  1. குமுதம் ஜோதிடம்; 7.12.2012; மாமுனிவரின் கோபத்தைத் தணித்த மாதவனின் கருணை! கட்டுரை; பக்கம் 1,2,3
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-07-28. பார்க்கப்பட்ட நாள் 2014-12-12.