இளநகர் உடையீசுவரர் கோயில்
இளநகர் உடையீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் இளநகர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக உடையீசுவரர் உள்ளார். இங்குள்ள இறைவி உமையம்பிகை ஆவார். இவர் சுகப்பிரசவ நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். கோயிலின் மரம் வில்வம் ஆகும். தைப்பூசம், சிவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.[1]
அமைப்பு
திருச்சுற்றில் விநாயகர், நவக்கிரகங்களின் சன்னதிகள் உள்ளன. மூலவர், சன்னதியில் உள்ளார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். இங்குள்ள விநாயகர் சித்தி விநாயகர் ஆவார். பல வருடங்களுக்கு முன்பு இங்கு வசித்த சிவபக்தர் வயலை உழுதபோது ஏர்க்கால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுவிட்டது. அதனை எடுக்க முயற்சி மேற்கொண்டபோது செம்மண்ணால் லிங்கம் இருப்பதைக் கண்டு அதனை அமைத்து கோயில் கட்டினார். ஏர்க்கால் தடுத்து கிடைக்கப்பெற்றதால் மூலவர் உடையீசுவரர் எனப்படுகிறார். ஏர்க்காலை உடை என்பர். இக்கோயிலின் திருப்பணி போது ஒரு நந்தி கிடைத்தபோது அதனை கோயிலில் வைத்து வழிபடத்தொடங்கியுள்ளனர். இறைவியை வழிபட வந்த நிறைமாத கர்ப்பிணி நந்தி மேல் சாயவே, நந்தி சிறிது சிறிதாக நகர்ந்தது. அவள் தடுமாறி தரையில் சாய்ந்தாள். அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது முதல் அந்த நந்தி சுகப்பிரசவ நந்தி என்றழைக்கப்படுகிறது.[1]