இடிகரை வில்லீசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இடிகரை வில்லீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இடிகரை என்னுமிடத்தில்அமைந்துள்ளது. முன்னர் இவ்வூர் இருகரை என்றழைக்கப்பட்டது. [1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 443 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 11°07'04.1"N, 76°58'14.4"E (அதாவது, 11.117813°N, 76.970661°E) ஆகும்.

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக வில்லீசுவரர் உள்ளார். இவர் வில்லீசுவர பரமுடையார் என்றும் அழைக்கப்படுகிறார். மூலவர் நெற்றியில் மூன்று கோடுகளுடன் காணப்படுகிறார். இறைவி வேதநாயகி ஆவார். வில்வம் இக்கோயிலின் தல மரமாகும். கோயிலின் தல தீர்த்தமாக கிணறு உள்ளது. சித்திரைப் பிறப்பு, ஆடி வெள்ளி, தை வெள்ளி, கந்த சஷ்டி, ஆருத்ரா தரிசனம், மகாசிவராத்திரி, பங்குனி சோமவாரம், திருவாதிரை, குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, கார்த்திகை உள்ளிட்ட பல விழாக்கள் நடைபெறுகின்றன. [1]

அமைப்பு

மூலவர் மீது ஆவணி 14, 15, 16 ஆகிய நாள்களில் சூரிய ஒளி விழுகிறது. இத்தல விநாயகர் சாந்த விநாயகர் ஆவார். மூலவருக்கு இடது புறம் இறைவி சன்னதி உள்ளது. பாலசுப்பிரமணியர் சன்னதி தனியாக உள்ளது. ஆல மரத்தின்கீழ் தட்சிணாமூர்த்தி உள்ளார். இக்கோயிலும், அருகிலுள்ள கோயில்பாளையம் காலகாலேசுவரர் கோயிலும், வடமதுரை விருந்தீசுவரர் கோயிலும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளதாகக் கூறுவர்.[1]

மேற்கோள்கள்