ஆங்கரை மருதாந்த நாதேசுவரர் கோயில்
ஆங்கரை மருதாந்த நாதேசுவரர் கோயில் திருச்சி மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
இக்கோயில் திருச்சி மாவட்டத்தில் லால்குடி வட்டத்தில் அமைந்துள்ளது.[1]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக மருதாந்த நாதேசுவரர் உள்ளார். இறைவி சுந்தர காஞ்சனி ஆவார்.[1]
அமைப்பு
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், தண்டபாணி, சுப்பிரமணியர், கஜலட்சுமி சன்னதிகள் உள்ளன. ஒரே திருச்சுற்று கொண்ட இக்கோயிலில் துர்க்கையம்மன், சண்டிகேசுவரர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. கோயிலின் தெற்கு வாயிலே பயன்பாட்டில் உள்ளது. இறைவி சன்னதி தெற்கு நோக்கிய நிலையில் உள்ளது. இறைவனையும், இறைவியையும் ஒரே சுற்றாகச் சுற்றி வரும் வகையில் சன்னதிகள் அமைந்துள்ளது. 1968இல் இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது.[1]
திருவிழாக்கள்
தமிழ்ப்புத்தாண்டு, வைகாசி விசாகம், ஆடிக் கார்த்திகை,விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி, நவராத்திரி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் போன்றவை இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களாகும்.[1]