அழிசூர் அருளாலீசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அருளாலீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தின் அழிசூர் என்னும் ஊரிலுள்ள சிவன் கோயில் ஆகும்.

அமைவிடம்

இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் அழிசூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. அழிஞ்சல் மரத்தடியில் அகத்தியர் இறைவனை வழிபட்டதால் இவ்விடம் அழிசூர் என்றழைக்கப்படுகிறது. செய்யாறு நதியின் தென் கரையில் இவ்வூர் உள்ளது.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக அருளாலீசுவரர் உள்ளார். இங்குள்ள இறைவி அம்புஜ குசலாம்பாள் ஆவார். இறைவி அபய முத்திரையுடன் காணப்படுகிறார். சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.[1]

அமைப்பு

கோயில் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளது. நுழைவாயில் தெற்கு நோக்கி உள்ளது. கல் தூண் துவஜஸ்தம்பமாக உள்ளது. வெளிச்சுற்றில் நந்தி மற்றும் பலி பீடம் ஆகியவை உள்ளன. சோழர்களால் இக்கோயில் கட்டப்பட்டது. பின்னர் கி.பி.1123இல் விக்கிரம சோழனின் ஐந்தாவது ஆட்சியாண்டில் இக்கோயில் கட்டப்பட்டது. மங்கல விநாயகர், முருகன், பைரவர், லட்சுமி நாராயணர் சன்னதிகள் உள்ளன. இறைவி தனி சன்னதியில் உள்ளார்.

நுழைவஊரின் வடகிழக்கில் இக்கோயில் தெற்கில் நுழைவாயிலைக் கொண்டுள்ளது. ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரத்துடன் கோயில் உள்ளது. முதல் திருசசுற்றில் சிங்கத்தூண் மண்டபத்தில் சக்கர விநாயகர், கோயில் குளம், கோயில் மரம், நந்தி மண்டபம், அலங்கார மண்டபம் ஆகியவை உள்ளன. மகாமண்டபம், நவக்கிரக சன்னதியை அடுத்துப் பலி பீடமும் சிங்க மண்டபமும் உள்ளன. மூலவர் சன்னதி கஜபிருஷ்ட வடிவில் உள்ளது. உட்பிரகார ஈசான மூலையில் பைரவர் உள்ளார். மூன்றாவது திருச்சுற்றில் அஷ்ட நாகங்களான அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன், சங்கன், பத்மன், மகாபத்மன், குளிகன் ஆகியோர் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்