அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில்
அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 10°02′30″N 78°47′02″E / 10.0417°N 78.7839°ECoordinates: 10°02′30″N 78°47′02″E / 10.0417°N 78.7839°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | காரைக்குடியில் தென் திருப்பதி |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சிவகங்கை மாவட்டம் |
அமைவிடம்: | அரியக்குடி |
சட்டமன்றத் தொகுதி: | காரைக்குடி (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | சிவகங்கை மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 121 m (397 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | திருவேங்கடமுடையான் |
தாயார்: | அலர்மேல்மங்கை |
குளம்: | உண்டு |
சிறப்புத் திருவிழாக்கள்: | சித்ரா பௌர்ணமி, சித்திரை மாதப் பிறப்பு, வைகாசி பிரம்மோற்சவம், ஆடிப்பூரம், ஆடி சுவாதி, கோகுலாஷ்டமி, புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திர திருக்கல்யாணம் |
உற்சவர்: | சீனிவாச பெருமாள் |
உற்சவர் தாயார்: | ஸ்ரீதேவி மற்றும் பூதேவி |
அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி பகுதிக்கு அருகில் அரியக்குடி புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1][2][3] காரைக்குடியில் ஒரு தென்திருப்பதி என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது.[4] இங்கிருந்து சுமார் பதினைந்து கி.மீ. தூரத்தில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் அமையப் பெற்றுள்ளது. இக்கோயிலின் மூலவர் திருவேங்கடமுடையான் மற்றும் தாயார் அலர்மேல்மங்கை ஆவர். உற்சவர் சீனிவாச பெருமாள் மற்றும் உற்சவ தாயார்கள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆவர். இக்கோயிலின் கருடாழ்வார் தனது இருபுறமும் சிம்மங்களுடன் காட்சியளிக்கிறார். ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் ஆகியோரும் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர். மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை நினைவூட்டும் சித்திரங்களைக் கொண்ட தசாவதார மண்டபம் ஒன்று இங்கு அமைக்கப்பட்டுள்ளது.[5]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 121 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள உத்தர வீரராகவப் பெருமாள் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 10°02′30″N 78°47′02″E / 10.0417°N 78.7839°Eஆகும்.
சித்ரா பௌர்ணமி, சித்திரை மாதப் பிறப்பு, வைகாசி பிரம்மோற்சவம், ஆடிப் பூரம், ஆடி சுவாதி, கோகுலாஷ்டமி, புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திர திருக்கல்யாணம் ஆகிய திருவிழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.[6]
இக்கோயிலானது, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[7]
மேற்கோள்கள்
- ↑ ValaiTamil. "அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
- ↑ "அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் தேரோட்டம்: குழந்தைகளை தேருக்கு அடியில் வைத்து விநோத வழிபாடு". Hindu Tamil Thisai. 2023-06-05. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
- ↑ மாலை மலர் (2022-06-07). "அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோவில் - அரியக்குடி". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
- ↑ Dinesh TG. "காரைக்குடியில் ஒரு தென்திருப்பதி சென்று வாருங்கள்.. திருப்பம் கிடைக்கும்". Asianet News Network Pvt Ltd. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
- ↑ Aniruddh (2021-12-21). "Tiruvengadamudaiyan, Ariyakudi, Sivaganga". TN Temples Project (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
- ↑ "Tiruvengadam Udayan Temple : Tiruvengadam Udayan Tiruvengadam Udayan Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
- ↑ "Arulmigu Thiruvengatamudayan Temple, Ariyakkudi - 630202, Sivagangai District [TM035733].,Then Thiruppathi,Thiruvengadamugdaiyan". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.