அப்பன்திருப்பதி சீனிவாச பெருமாள் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அப்பன்திருப்பதி சீனிவாச பெருமாள் கோயில்
அப்பன்திருப்பதி சீனிவாச பெருமாள் கோயில் is located in தமிழ் நாடு
அப்பன்திருப்பதி சீனிவாச பெருமாள் கோயில்
அப்பன்திருப்பதி சீனிவாச பெருமாள் கோயில்
ஆள்கூறுகள்:10°01′10″N 78°11′33″E / 10.0195°N 78.1925°E / 10.0195; 78.1925Coordinates: 10°01′10″N 78°11′33″E / 10.0195°N 78.1925°E / 10.0195; 78.1925
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மதுரை மாவட்டம்
அமைவிடம்:அப்பன்திருப்பதி
சட்டமன்றத் தொகுதி:மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:மதுரை மக்களவைத் தொகுதி
ஏற்றம்:204 m (669 அடி)
கோயில் தகவல்
மூலவர்:சீனிவாச பெருமாள்
தாயார்:அலர்மேல்வள்ளி
சிறப்புத் திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி,
சித்திரை திருவிழா

அப்பன்திருப்பதி சீனிவாச பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் அப்பன்திருப்பதி புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1] ஆண்டுதோறும் மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறும் போது, அழகர் கோயிலிலிருந்து கள்ளழகர் மதுரை விசயம் செய்யும் போது, இக்கோயிலின் மண்டபத்தில் ஓர் இரவு தங்கிச் செல்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 204 மீட்டர் உயரத்தில், 10°01′10″N 78°11′33″E / 10.0195°N 78.1925°E / 10.0195; 78.1925 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, அப்பன்திருப்பதி சீனிவாச பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலின் மூலவர் சீனிவாச பெருமாள்; தாயார் அலர்மேல்வள்ளி ஆவர். கருடாழ்வார், அனுமன், சக்கரத்தாழ்வார், விச்வக்சேனர், நம்மாழ்வார், இராமர், இராமானுசர் மற்றும் மணவாள மாமுனிகள் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[2]

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் இயங்குகிறது.[3]

மேற்கோள்கள்

  1. கோமதி அரசு (2015-09-20). "திருமதி பக்கங்கள்: சீனிவாசப் பெருமாள் திருக்கோவில் அப்பன் திருப்பதி". திருமதி பக்கங்கள். பார்க்கப்பட்ட நாள் 2023-08-17.
  2. "Temple : Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-17.
  3. "Arulmigu Srinivasa Perumal Temple, Appanthirupathy - 625301, Madurai District [TM032070].,Srinivasaperumal". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-17.

வெளி இணைப்புகள்