அச்சுதமங்கலம் காசி விசுவநாதர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அச்சுதமங்கலம் காசி விசுவநாதர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் அச்சுதமங்கலம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக காசி விசுவநாதர் உள்ளார். இங்குள்ள இறைவி விசாலாட்சி ஆவார். [1]

சிறப்பு

இக்கோயில் பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட பெருமையை உடையதாகும். தருமர் தவமிருந்து சிவனை வணங்கிய இடமாகவும் இக்கோயில் கருதப்படுகிறது. உண்மையே பேசிவந்த அரிச்சந்திரன் பல கோயில்களைத் தரிசித்துவிட்டு இங்கு வழிபட்டு இத்தல இறைவனின் அருளை உணர்ந்தார்.அவ்வாறே இங்குள்ள தீர்த்தம் மிக சிறப்பானது என்பதையும் உணர்ந்தார். [1]

திருவிழாக்கள்

பிரதோஷம், சிவராத்திரி போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. [1]

மேற்கோள்கள்