அக்கினி வீரண்டாள் கோவில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அக்கினி வீரண்டாள் கோவில்
அக்கினி வீரண்டாள் கோவில்.
அக்கினி வீரண்டாள் கோவில்.
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மதுரை,பேரையூர் வட்டம்
அமைவு:சலுப்பபட்டி
கோயில் தகவல்கள்
சிறப்பு திருவிழாக்கள்:சிவராத்திரி.
கட்டிடக்கலையும் பண்பாடும்
கோயில்களின் எண்ணிக்கை:2 (அக்கினி வீரண்டாள், கொரளிக்கட்டயன்)

அக்கினி வீரண்டாள் கோவில் என்பது மதுரை மாவட்டத்தில், சலுப்பபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கிராமக் கோவில் ஆகும். இந்தக் கோவில் இங்குள்ள அகமுடையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குலதெய்வமாக வணங்கும் கோயிலாகும்.

வரலாறு

பதினேழாம் நுற்றாண்டின் இறுதி காலகட்டங்களில் நடைபெற்ற போரில் சலுப்பபட்டி வீரக்காள் என்பவரது கணவன் குமார் தேவர் எதிரிகளுக்கு எதிராக வீரப்போர் புரிந்து வீர மரணம் அடைந்தார். அதையறிந்த மனைவி வீரக்காள் சந்தனக்கட்டையால் தீ மூட்டி அக்கினியில் குதித்து தன் உயிர் நீத்ததாகவும், ஆனால் அவரது சேலை மட்டும் தீயில் எரியவில்லை என்றும் இக்கோயிலின் வரலாறு குறித்த கதையாகக் கூறப்படுகிறது. அவரது மரபு வழியினர், வீரக்காள் நினைவாக சிலை வடித்து கோவில் எழுப்பி, குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இக்கோவிலின் முன்பு வீரக்காள் தம்பியான கட்டயன் காவல் தெய்வமாய் இருக்கிறார். இவரைக் கொரளிக்கட்டயன் என்றும் அழைக்கின்றனர். கட்டயனுக்கென்று தனியான கோவில் சின்னக்கட்டளையில் அமைந்துள்ளது. அக்கினி வீரண்டாள் கோயில் சலுப்பபட்டி, சின்னக்கட்டளை, பழையூர், சங்கரலிங்காபுரம், பாப்புநாயக்கன்பட்டி, மீனாட்சிபுரம், தொட்டணம்பட்டி விளத்தூர்,வெள்ளிக்குறிச்சி, ஜய்ஹிந்தபுரம் மதுரை , வீரப்பட்டி,அத்திபட்டி, துள்ளுக்குட்டி நாயக்கனூர்,சேடபட்டி போன்ற ஊர்களில் வாழும் அகமுடையர்களின் குல தெய்வக் கோயிலாக இருக்கிறது.

வழிபாடு

ஆண்டுதோறும் சிவராத்திரியன்று சிறிய அளவிலான விழா நடத்தப் பெறுகிறது. பெரிய அளவிலான விழா, கோடாங்கி எனப்படும் பூசகரால் சொல்லப்படும் நாட்களில் நடத்தப் பெறுகின்றன. கோடாங்கி குறிப்பிட்ட விழா தொடங்கும் நாளுக்கு, எட்டு நாட்களுக்கு முன்பாக, கோயில் விழாவிற்கான அறிவிப்பு செய்யப்படுகிறது. இந்த அறிவிப்பிற்கு பின்பு இறைச்சி உணவு உண்பது, வெளியூர் பயணங்கள் செல்வது போன்றவை தவிர்க்கப்படுகின்றன. இக்கோயில் விழாவில் விரதம் மேற்கொண்ட பெண் ஒருவர் பூ அள்ளுவது என்கிற நிகழ்வு சிறப்புடையது. இந்நிகழ்வில், விரதம் இருந்த பெண் தன் சேலையில் நெருப்பு உருவாக்கப்பட்ட சந்தனக்கட்டையை வைத்துக் கோவிலைச் சுற்றி வருவார். இந்நிகழ்வில் அந்தப் பெண்ணின் சேலை, நெருப்பால் எவ்வித பாதிப்புமடைவதில்லை. இக்கோயில் விழாவின் போது பல்வேறு கிராமக்கலை நிகழ்ச்சிகள் நடத்தப் பெறுகின்றன.